Friday, February 3, 2017

இஸ்லாத்தின் அழைப்பு மொழி..!!



சமீபத்தில் படித்த நூல்களிலேயே மிகச் சிறந்த நூல் "அழைப்பாளர்களின் அழைப்பு மொழியில் இஸ்லாம்” எனும் யூஸுஃப் அல்கர்ளாவியின் நூல்.

இஸ்லாத்தின் அழைப்பு மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், எதைப் பேச வேண்டும்? எவ்வாறு பேச வேண்டும்? என்பது குறித்தும் மிகச் சிறப்பாக விவரித்துச் செல்கிறது அந்த நூல்.

அதன் ஒரு பகுதி...

முஸ்லிம்களுக்கு சொல்லப்படவேண்டியவை சிலபோது முஸ்லிமல்லாதவர்களுக்குப் அவசியமற்றவையாக இருக்கலாம். ஒரு புதிய முஸ்லிமுக்கு சொல்லப்பட வேண்டியவை, பி்றப்பிலேயே முஸ்லிமாக இருப்பவருக்கு தேவையற்றதாக இருக்கலாம்.

நல்ல மனிதருக்குச் சொல்லப்பட வேண்டியவற்றை ஒரு மோசமான மனிதரிடம் பேசுவது பொருத்தமற்றது.

முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்தில் வசிப்பவருக்குச் சொல்லப்பட 
வேண்டியவை, முஸ்லிம் சிறுபான்மையாக இருக்கும் சூழலுக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம்.

பெண்களுக்குச் சொல்லப்பட வேண்டியவற்றை ஆண்களுக்குச் சொல்வதால் எப்பயனும் இல்லை.

பணக்காரர்களுக்குச் சொல்ல வேண்டியதை ஏழைகளுக்கு எடுத்துரைப்பதால் நன்மைகள் விளையாது.

போர் சூழலில் பேசவேண்டியதை அமைதி நிலவும் சூழலில் பேசத் தேவையில்லை. பூகோளம் கிராமமாக ஆகிவிட்ட யுகத்தில் 18ஆம் நூற்றாண்டுக் கதைகளை மீட்டுவது அறிவுடைமையே அல்ல.

ஒரு துறையைத் உயர்த்தி மற்றொரு துறையைத் தாழ்த்தும் வகையில் பேசுவது இஸ்லாமிய மொழியல்ல..

அதேநேரம், தான் பேசாத ஒரு துறை பற்றி மற்றொருவர் பேசுவதை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகவும் எவரும் கருதிவிடக் கூடாது.

அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவி

No comments :

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.